சுடச்சுட

    

    ரசாயனக் கழிவு நீரால் பாதிப்பு தொழிற்சாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 25th July 2013 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை அருகே தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீராலும், நச்சுக்காற்றாலும் பாதிக்கப்படுவதாகக் கூறி அக்ராவரம் பகுதி மக்கள் தொழிற்சாலைக்கு பூட்டுப் போட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள நீர்நிலைகளிலும், விவசாய நிலங்களில் தேங்கி வருகிறது.

    இதனால் அக்ராவரம், புதுஅக்ராவரம் ஆகிய பகுதிகளிலில் குடிநீர் மாசுபட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனராம். இந்த கழிவுநீரைக் குடிக்கும் கால்நடைகள் இறந்து விடுகின்றனவாம்.

    மேலும் அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக் காற்றால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இதுதொடர்பாக சம்பந்தபட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அக்ராவரம், புதுஅக்ராவரம் பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர், கால்நடைகளுடன் தொழிற்சாலையின் முன் திரண்டனர். தொழிற்சாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றினால் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai