Enable Javscript for better performance
வெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு

    By வேலூர்  |   Published on : 25th July 2013 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தை சிபிசிஐடி போலீஸார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வெள்ளையப்பன் ஜூலை 1-ம் தேதி அடையாளம் தெரியாத சிலரால் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள முத்துமண்டபம் அருகில் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை நடந்த இடத்தில் சக்தி வாய்ந்த 5 குழாய் வெடிகுண்டுகள், செருப்புகள், சிவப்பு நிற சட்டை உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். மாவட்ட காவல் துறை சார்பில், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளிகளைக் கண்டறிவதற்கான துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

    இரு கொலை சம்பவங்களுக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி ஐ.ஜி. மஞ்சுநாதா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    வேலூரில் தற்போது முகாமிட்டுள்ள சிபிசிஐடி தனிப்படை போலீஸார், மாவட்ட காவல் துறை நிர்வாகம் இதுவரை நடத்தியுள்ள விசாரணைக் குறிப்புகளைப் பரிசீலித்தனர். அதைத் தொடர்ந்து வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தை செவ்வாய்க்கிழமை மாலை பார்வையிட்டுத் திரும்பினர்.

    அதைத் தொடர்ந்து டிஐஜி அலுவலகத்தில், வெள்ளையப்பனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இந்து முன்னணி இயக்கப் பிரமுகர்கள் சிலரை புதன்கிழமை அழைத்து தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து வியாழக்கிழமையும் வேலூரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai