சுடச்சுட

    

    வாலாஜா வட்டம் தகரக்குப்பம் கிராமத்தில் 495 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி புதன்கிழமை வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை தொகுதி அதிமுக செயலாளர் தகரக்குப்பம் முனிசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சி.பாண்டுரங்கன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முகமதுஜான் மற்றும் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான சுமைதாங்கி சி.ஏழுமலை ஆகியோர் 495 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றிய குழுத் தலைவர் வி,கே.நிர்மலா, துணைத் தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் எம்.சி. பூங்காவனம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வன்னிவேடு ராதாகிருஷ்ணன், மற்றும் பாகவெளி மூர்த்தி, டைலர் சேட்டு மற்றும் வாலாஜா வட்டாட்சியர் பா.ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சத்யா, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு வீரர்களுக்கு பதவி உயர்வு தேர்வு

    வேலூர், ஜூலை 24: வேலூரில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதித் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.

    வேலூர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இத்தேர்வில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 74 பேர் பங்கேற்றனர். தேர்வுப் பணிகளை தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநர் டேவிட் வின்சென்ட், 4 மாவட்ட கோட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.

    பொது அறிவுத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, துறை தொடர்பான அறிவுத்திறன், செய்முறைத் தேர்வு என 4 வகை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மூப்பு அடிப்படையில் தீயணைப்பு பணியில் இருந்து முன்னணி தீயணைப்போர் மற்றும் ஓட்டுநர் பதவி உயர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai