சுடச்சுட

    

    அரக்கோணம் புதிய பஸ்நிலையத்தினுள் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

    அரக்கோணம் புதிய பஸ்நிலையத்தினுள் குத்தகைக்கு கடை வைத்திருப்பவர்கள் கூடுதலாக நடைபாதை இடத்தையும் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தனர். இதையடுத்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபு தலைமையில் நகரமைப்பு அலுவலர் தயாநிதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், புதிய பஸ்நிலையத்தில் கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர். மேலும் பஸ்நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இப்பணிகளையொட்டி, அரக்கோணம் நகர காவல்நிலைய ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ்நிலையத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆலைகளுக்கு சொந்தமான பேருந்துகளையும் போலீஸார் வெளியேற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai