சுடச்சுட

  

  வேலூர், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  விழுப்புரத்தில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

  இதையொட்டி வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி அந்த அறிக்கையை மண்டலக் கூட்டத்தில் சமர்ப்பிப்பது வழக்கம்.

  அவ்வகையில், வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகரில் உள்ள பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரக இணை இயக்குநர் அறிவழகன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.

  அவர் மருத்துவமனையின் ரத்த சேகரிப்புப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட சிகிச்சைப் பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பிணவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.அதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்திச் சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai