Enable Javscript for better performance
அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு \\\"உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு "உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்

    By 'வேலூர்  |   Published on : 26th July 2013 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்ட பாஜக மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை காவல் துறை கண்டறிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

    வேலூர் தனியார் விடுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளுடன், பாஜக தலைமை அனுப்பிய 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர். இதையடுத்து நிருபர்களிடம் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது:

    வேலூரில் அரவிந்த் ரெட்டி மற்றும் வெள்ளையப்பன் கொலை சம்பவங்கள் எப்படி நடந்தன, காவல் துறை இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது போன்ற விவரங்களை வேலூர் நகர நிர்வாகிகளிடம் விசாரணைக் குழுவினர் கேட்டறிந்தனர்.

    இதில் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்பது அனைவரது ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. எனவே அரவிந்த் ரெட்டி கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இக்கொலை குறித்தும் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai