சுடச்சுட

  

  இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை பாஜக மூவர் குழு வேலூரில் விசாரணை

  By வேலூர்,  |   Published on : 26th July 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் மாநில மருத்துவ அணி மாநிலச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி மற்றும் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது குறித்து பாஜக தலைமை அமைத்த மூவர் குழு வேலூரில் வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

  குழுவில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர், மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே, செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வேலூருக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வந்தனர். இவர்களுடன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச் செயலர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழசை செüந்தரராஜன் ஆகியோர் வந்திருந்தனர்.

  குழுவினர் முதலில், டாக்டர் அரவிந்த் ரெட்டி 2012 அக்டோபர் 23-ம் தேதி கொலை செய்யப்பட்ட வேலூர் தினகரன் திரையரங்கு சாலையில் பார்வையிட்டனர். பின்னர் சத்துவாச்சாரி, ரங்காபுரத்தில் அவரது இல்லத்துக்குச் சென்ற குழுவினர் அரவிந்த் ரெட்டி மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் வேலூர் முத்துமண்டபம் அருகே சு.வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

  அதைத் தொடர்ந்து பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் மாவட்ட அளவிலான பாஜக மற்றும் இந்து முன்னணி இயக்க நிர்வாகிகளுடன் தனித்து ஆலோசனை நடத்தினர்.

  முன்னதாக விசாரணைக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்த குழுவில் இடம்பெற்ற நாங்கள் மூவரும் கோவைக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளை புதன்கிழமை சந்தித்தோம்.

  அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக விசாரித்தோம். மாலையில் வேலூரில் முகாமிட்டுள்ளோம்.

  விசாரணையின்போது நாங்கள் அதிர்ச்சி தரத்தக்க தகவல்களை பெற்றோம்.

  வேலூரில் நடந்த அரவிந்த் ரெட்டி கொலை மற்றும் வெள்ளையப்பன் கொலை சம்பவங்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இக்கொலைகள் அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டவை. நாங்கள் சேகரித்த தகவல்களை மாநில தலைமை காவல் துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து வெள்ளிக்கிழமை அளிக்கவுள்ளோம்.

  அத்துடன் எங்களின் முழுமையாக விசாரணை அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் வரும் 29-ம் தேதி அளிக்கவுள்ளோம். வரும் மக்களவைக் கூட்டத் தொடரிலும் இப்பிரச்னை எழுப்பப்படும் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai