சுடச்சுட

  

  ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் அருகே உள்ள அரும்பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி மரகதம் (38). இவர்களது மகன் பிரேம்குமார் (4). மரகதம் தனது மகன் பிரேம்குமாரை அழைத்துக்கொண்டு புதன்கிழமை திருவலம் - காட்பாடி சாலையை கடக்க முயன்றார். அப்போது திருவலத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் இறந்தனர்.

  விபத்து குறித்து மரகதத்தின் கணவர் சங்கர் அளித்த புகாரின் பேரில் திருவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பாக திருவலத்தைச் சேர்ந்த டாக்டர் பாரிமார்க்ஸ் என்பவரை கைது செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai