சுடச்சுட

  

  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு குறைவான கூலி வழங்குவதாகக் கூறி பெண் தொழிலாளர்கள் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

  வாலாஜா ஒன்றியம் சென்னசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட புளியங்குளம் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 

  இவர்களுக்கு குறைவான கூலி வழங்கப்பட்டு வருகிறதாம். இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் வாலாஜாபேட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  தகவலறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி அன்பரசு, பணிமேற்பார்வையாளர்கள் சுமதி, காளிதாஸ் ஒன்றியக் குழு துணைத் தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து வேலைக்கு ஏற்றக் கூலி வழங்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் முற்றுகை போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  வி.சி.மோட்டூரில்...

  இதேபோன்று வி.சி.மோட்டூர் ஊராட்சிக்குள்பட்ட வன்னிவேடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களும் முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என வலியுறுத்திய இவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai