சுடச்சுட

  

  சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் பாடுபட வேண்டும்

  By வேலூர்  |   Published on : 26th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இன்றைய மாணவர்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும். முற்போக்கு மனித மாண்புகளை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கேட்டுக் கொண்டார்.

  விஐடியில், 2013-14-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் "மை ட்ரீ' என்ற பெயரில் பல்கலைக்கழகப்  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து ராஜா பேசியது:

  நாட்டில் பொது மற்றும் தனிப்பட்டவர்களின் மதிப்பு பலவீனப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர் சமுதாயம் இந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும். முற்போக்கு மனித மாண்புகளை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ததும் உங்கள் தொழிலை மட்டுமே கவனிக்கும் சுயநலவாதிகளாக மாறிவிடக் கூடாது என்றார் ராஜா.

  விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai