சுடச்சுட

    

    சுங்க வசூல் டெண்டரில் முறைகேடு:நகர்மன்ற உறுப்பினர் புகார்

    By குடியாத்தம்,  |   Published on : 26th July 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்க நடைபெற்ற டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது என நகர்மன்ற உறுப்பினர் புகார் கூறியதால் நகர்மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    குடியாத்தம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய 17-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வி.என். கார்த்திகேயன், லாரியில் குடிநீர் விநியோகித்தது, நகராட்சிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது, தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்க நடைபெற்ற டெண்டர், பசுமாத்தூர் நீரேற்று நிலையத்திற்கு மின் மோட்டார்கள் வாங்கியது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறியதால் நகர்மன்றத் தலைவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ரூ. 2 கோடியில் தொடங்கப்பட்டுள்ள ராபின்சன் குளம் புனரமைக்கும் பணியை தலைவர், ஆணையர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ஆர்.மூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai