Enable Javscript for better performance
செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காட்பாடி வட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேலாண்மைக் குழுத் தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியம் கெüரவிக்கப்பட்டார். அத்துடன் 6 மாத காலத்துக்கு தாற்காலிகமாக துணைத் தலைவர் பொறுப்பை ஆர்.சீனிவாசன் கூடுதலாக ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், இடமாறுதல் பெற்றுச் செல்லும் சங்க நிதிக்குழு உறுப்பினரும், இந்தியன் வங்கி காட்பாடி கிளை மேலாளருமான எஸ்.சங்கரநாராயணனுக்கு பிரிவுபசாரம் செய்யப்பட்டது.

    மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், மதிப்பியல் செயலர் செ.நா.ஜனார்த்தனன், வழக்குரைஞர் டி.எம்.விஜயராகவலு, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் இரா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai