சுடச்சுட

  

  தங்க நாற்கரச் சாலையில்அதிவேகமாகச் சென்ற வாகனங்களுக்கு அபராதம்

  By வேலூர்,  |   Published on : 26th July 2013 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டம் வழியாக தங்க நாற்கர சாலையில் அதிவேகமாகச் சென்ற 14 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

  தங்க நாற்கர சாலையில் பாதசாரிகள் கடந்து செல்லும் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் மாவட்டத்தின் பல இடங்களில் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டதன்பேரில், தங்க நாற்கர சாலையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரசன்னா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  வேலூர், அப்துல்லாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் அப்பகுதியைக் கடந்த 14 வாகனங்கள் நிறுத்தப்பட்டு  அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் வாகன ஓட்டிகள் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai