சுடச்சுட

  

  பசுமைத் தாயக நாள் விழாவையொட்டி ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு பாமக மாவட்டச் செயலாளர் எ.நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.கே.முரளி, முன்னாள் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ கே.எல்.இளவழகன், மாவட்ட துணை செயலாளர் பா.சுந்தரேசன் ஆகியார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சு.ராசரத்தினம் வரவேற்றார்.

  இந்த விழாவில் முன்னாள் ரயில்வே துறை இணையமைச்சர் ஆர்.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியின் போது கட்சியின் நிர்வாகிகள் சி.மணிஎழிலன், சபரிகிரீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  அரக்கோணம்

  அரக்கோணம் நகர பாமக சார்பில் பசுமைத் தாயக நாள் விழா அரக்கோணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

  விழாவுக்கு பாமக நகரச் செயலர் பொன்.வேலு தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் ஜி.உமாமகேஸ்வரி முதல் மரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

  தலைமை நிலையப் பேச்சாளர் தம்பிஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலர் ரா.செல்வராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.ஜி.ராமசாமி, மாவட்ட வன்னியர் சங்க செயலர் கோ.ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai