Enable Javscript for better performance
புகையிலை பொருள்கள் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

     நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி உத்தரவின்படி நகராட்சி சுகாதார அலுவலர் எஸ்.ராஜரத்தினம், உணவு பாதுகாப்பு அலுவலர் முனிராஜ், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், சீனிவாசன் உள்ளிட்டோர் சுண்ணாம்பேட்டையில் ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ எடையுள்ள பான்பராக், குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai