Enable Javscript for better performance
போலீஸாரால் தேடப்படுபவரைப் பார்த்ததாக நகர்மன்ற உறுப்பினர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாரால் தேடப்படுபவரைப் பார்த்ததாக நகர்மன்ற உறுப்பினர் தகவல்

    By ஆம்பூர்,  |   Published on : 26th July 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பன்னா இஸ்மாயிலை பார்த்ததாக பாஜக நகர்மன்ற உறுப்பினர் தெரிவித்த தகவலின் பேரில் போலீஸார் ஆம்பூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் பாரதிய ஜனதா கட்சி நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.சி.சீனிவாசன். இவரது கடை எஸ்.கே. பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கடையருகே ஒரு நபர் புதன்கிழமை பகல் சுமார் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த சரவணன் அந்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த பி.ஆர்.சி. சீனிவாசனும் அந்த நபரிடம் விசாரித்துள்ளார். உடனே அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டாராம். அந்த நபர் பன்னா இஸ்மாயிலாக இருக்கலாம் என இருவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்பூர் டவுன் போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பி.ஆர்.சி.சீனிவாசன், சரவணன் ஆகியோர் ஆம்பூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி.க்கள் சீதாராமன், மதி, விஜயகுமார், சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நசீர் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இதையடுத்து, தேடப்பட்டு வரும் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் குறித்து தனிப்படை போலீஸார், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆம்பூர் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai