சுடச்சுட

  

  வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்துத் துறை ஊழியர் சங்கப் போராட்டக் குழுவை சேர்ந்த 44 பெண்கள் உள்பட 108 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும். சத்துணவு, ஊட்டச்சத்து துறைகளில் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடத்தப்

  பட்டது.

  ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த மறியலுக்கு மாவட்டப் போராட்டக்குழு தலைவர் சிலுப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேகர், மோகனமூர்த்தி, ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai