சுடச்சுட

    

    குடியாத்தம் பிச்சனூர் காமராஜர் தொண்டு மன்றம் சார்பில், கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    மன்றத் தலைவர் கோ. ஜெயவேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜே. தமிழ்ச்செல்வன் வரவேற்றார். குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் க. எதிராசனார் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள், சீருடைகள் ஆகியவற்றை வழங்

    கினார் .

    ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன், வழக்குரைஞர் எஸ். சம்பத்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. பழனி, பூங்கோதை முனியப்பன், நிர்வாகிகள் எம். மார்கன், டி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai