Enable Javscript for better performance
91 ஆயிரம் முட்டைகள்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    91 ஆயிரம் முட்டைகள்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோதனை

    By வாணியம்பாடி  |   Published on : 26th July 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 91 ஆயிரம் முட்டைகளை கந்திலி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், உணவுகள் குறித்து சோதனை செய்ய அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முட்டைகள் நாமக்கலிருந்து லாரி மூலம் வியாழக்கிழமை கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தடைந்தன. கொண்டு வரப்பட்ட 91 ஆயிரம் முட்டைகளை கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சி.செல்வம் (வ.ஊ),

     சரஸ்வதி (கி.ஊ) ஆகியோர் அனைத்து முட்டைகளும் தரமான முட்டைகளா என சோதனையிட்டனர்.

    மேலும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் முட்டைகளில் ஒவ்வொரு கிழமைகளுக்கு ஏற்ப வண்ணம் தீட்டப்பட்டு முத்திரையிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai