சுடச்சுட

    

    அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.12 ஆயிரம் வழிப்பறி: இருவர் கைது 

    By வாலாஜாபேட்டை  |   Published on : 27th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபேட்டையில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.12 ஆயிரம் வழிப்பறி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    திருப்பத்தூரை அடுத்த குரிசலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (74). அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை வாலாஜாபேட்டைக்கு வந்தார். ஆலைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு வாலாஜாபேட்டையில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக பஸ்ஸில் ஏற முயன்றார்.

    அப்போது அவரைத் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கங்காதரனின் பாக்கெட்டை பிளேடால் கிழித்து ரூ.12 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் கூச்சலிட்டார்.

    அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த மர்ம நபர்களை துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை வாலாஜா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த ரஜினி (25), நரசிம்மன் (27) எனத் தெரிய வந்தது. அவர்களை வாலாஜா போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai