சுடச்சுட

    

    உழவர் சந்தையை அகற்றுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By குடியாத்தம்  |   Published on : 27th July 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் உழவர் சந்தை அகற்றப்படுவதைக் கண்டித்து திமுக மாணவரணி, விவசாய அணி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்எல்ஏ வி.ஜி.தனபால், ஒன்றியச் செயலர் கள்ளூர் கே.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ம.மனோஜ் வரவேற்றார்.

    கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் விவசாய அணி நிர்வாகி என்.இ.சத்யானந்தம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சி.ஏ. ஏகாம்பரம், முன்னாள் நகரச் செயலர் மா.விவேகானந்தன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணை அமைப்பாளர் ஜி.ஆர்.மணிமுடி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.கார்த்திகேயன், கே.வி.குப்பம் ஒன்றியச் செயலர் கே. தயாளமூர்த்தி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே. சீதாராமன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வி. விக்ரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவசாய அணி நிர்வாகி சி.பூபதி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai