சுடச்சுட

    

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு அடைப்பான் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பரதராமி அருகே மர்ம நோயால் கால்நடைகள் இறப்பதாக வந்த தகவலை அடுத்து ஆட்சியர் பொ.சங்கர் கால்நடைத் துறையினருக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    இதையடுத்து, வேலூர் கால்நடை நோய் புலனாய்வுக் குழுவினர் இறந்த கால்நடைகளை பரிசோதித்தபோது அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, பரதராமி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த 556 கால்நடைகளுக்கு அடைப்பான் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    நோய் பிற இடங்களுக்குப் பரவாமல் இருக்க குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai