சுடச்சுட

  

  சோளிங்கரில் துப்புரவு ஊழியர்களுக்கு தடுப்பூசி

  By வாலாஜாபேட்டை  |   Published on : 27th July 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சோளிங்கர் பேரூராட்சியில் பல்வேறு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு தொற்றுக்கிருமிகளால் உருவாகும் நோய் எதுவும் பரவாமலிருக்க தடுப்பூசி போடப்பட்டது.  

  சோளிங்கர் பேரூராட்சியில்  34 பேர் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு குப்பை அள்ளுவதற்கு தேவையான கையுறை,முகக்கவசம் எதுவும் இதுநாள் வரை பேரூராட்சி சார்பில் வழங்கப்படவில்லையாம்.

  கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்வது, குப்பையை அள்ளுவது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருவதால் தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது.

  இதை தடுக்கும் பொருட்டு பொன்னை வட்டார  மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயந்தி உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பூசிகள் போடப்பட்டன. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai