சுடச்சுட

  

  அரக்கோணம் அருகே திருமணமான ஒரே மாத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  அரக்கோணத்தை அடுத்த தண்டலம் காலனியைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (28), கட்டடத் தொழிலாளி. இவருக்கும் சாராள் (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது.

  இந்நிலையில் வியாழக்கிழமை முனிகிருஷ்ணன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. விடியற்காலை பார்த்தபோது சாராள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

  இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரே மாதம் ஆகியிருப்பதால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷினியும் விசாரணை நடத்தி வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai