சுடச்சுட

    

    தேடப்படுவோர் குறித்த சுவரொட்டிகள்: காவல் துறை வெளியிட்டது

    By ஆம்பூர்,  |   Published on : 27th July 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடையதாக போலீஸாரால் தேடப்படுவோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஆம்பூரில் காவல் துறையினர் ஒட்டியுள்ளனர்.

    பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையில் தொடர்புடையதாகத் தேடப்படுவோரின் படங்கள் அண்மையில் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது. அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்நபர்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் ஆம்பூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் படங்களை காட்டி பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போலீஸாரால் தேடப்படும் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக், பக்ருதின் என்கிற போலீஸ் பக்ருதின் ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஆம்பூரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.  அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai