சுடச்சுட

    

    வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேர்ணாம்பட்டு தோல் தொழிலதிபர்கள் சங்க அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அடிப்படை ஊதியத்தை ரூ.3 ஆயிரம் உயர்த்த வேண்டும், 30 நாள் கூலியை கணக்கிட்டு மாத சம்பளம் வழங்க வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சங்கத்தின் பேர்ணாம்பட்டு கிளைத் தலைவர் சி.எஸ். தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நேய. சுந்தர், மாவட்டத் தலைவர் சி. கோவிந்தராஜ்,   துணைத் தலைவர்கள் வி. விசுநவாதன், சி. துரைசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் வி.ஏ. ஏகாம்பரம், எஸ்.பி. ராஜேந்திரன், பேர்ணாம்பட்டு கிளைச் செயலாளர் பி. சம்பங்கி, பொருளாளர் ஏ.பி.எம். முனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai