சுடச்சுட

  

  தமிழகத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இத்தகைய திட்டங்களை மற்ற மாநிலத்தவரும் பெற்று நாடு வளம் பெற முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்று சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

  வேலூர், காட்பாடியில் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்து வெள்ளிக்கிழமை பேசியது:

  நியாயவிலைக் கடைகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான அரிசி மற்றும் இதரப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகையை முதல்வர் அளித்து வருகிறார்.

  முதல்வர் நாட்டின் பிரதமராக வருவதன் மூலம் தமிழகத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, நாட்டு மக்களும் நல்லத் திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

  இலக்கிய அணி மாவட்டச் செயலர் சோமு மணி, வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, மேயர் பா.கார்த்தியாயினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  குடியாத்தத்தில்...

  வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பில், குடியாத்தத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசினார். 

  நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார். பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் பொகளூர் டி. பிரபாகரன் வரவேற்றார்.

  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, எம்எல்ஏக்கள் கே.ஜி. ரமேஷ், கோவி. சம்பத்குமார், கு. லிங்கமுத்து, மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் வி. ராமு, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர், அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், ஒன்றியச் செயலர் எஸ். கோதண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆர். பாலசுப்பிரமணி, பேர்ணாம்பட்டு நகரச் செயலர் எல். சீனிவாசன், ஒன்றியச் செயலர் சி.வி. வெங்கடேசன், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai