சுடச்சுட

  

  ஜோலார்பேட்டை அருகே நிலத் தகராறு காரணமாக டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

  ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜியின் மகன்கள் ராமசாமி (60), நந்திகேசவன் (50). நிலம் தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாம்.

  இந்நிலையில் நந்திகேசவனும் அவருடன் இருக்கும் சிலரும் ராமசாமியையும், தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் ராமசாமியின் மகன் ராஜேஷ் பைலட்டையும் (17) மிரட்டி வந்தனராம். இதுகுறித்து ராமசாமியும், ராஜேஷ்பைலட்டும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ராஜேஷ்பைலட்டை, நந்திகேசவன் தகாத வார்த்தை சொல்லி தாக்கியிருக்கிறார். இதனால் மனமுடைந்த ராஜேஷ்பைலட் வீட்டுக்குச் சென்று ஒர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  இதுகுறித்து ராமசாமி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai