சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே பைக்கும் பஸ்ஸýம் மோதிக்கொண்ட விபத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொரு மாணவர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகிறார்.

    அரக்கோணத்தை அடுத்த மஞ்சம்பாடியைச் சேர்ந்த பிச்சமுத்துவின் மகன் அஜித்குமார் (19). இலுப்பைதண்டலத்தைச் சேர்ந்த சுந்தரேசனின் மகன் பார்த்திபன் (20). கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும், ஒரே பைக்கில் அரக்கோணத்தில் இருந்து இலுப்பைதண்டலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனர். வழியில் பொய்ப்பாக்கம் அருகே அரக்கோணத்தில் இருந்து பேரம்பாக்கம் சென்ற அரசு பஸ்ஸின் பக்கவாட்டில் பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பார்த்திபன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai