சுடச்சுட

    

    சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் கடந்த 4.1.2012ஆம் தேதி விஜயா (40) என்ற ஆதரவற்ற பெண் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிûலையில் இந்த வழக்கு தொடர்பாக சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் மோகன் (25) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.úஸவரின் அருள் பெலிசிட்டா, குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்குரைஞர் கே.எஸ்.சுரேஷ் ஆஜரானார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai