சுடச்சுட

  

  பல்வேறு இடங்களில் பைக்குகளைத் திருடியதாக இரண்டு இளைஞர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  திமிரி காவல் நிலைய ஆய்வாளர் கோபால் மற்றும் போலீஸார் தாமரைபாக்கம் பகுதியில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த அர்ஜுனபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (24), அனந்தபுரம் சுந்தரமூர்த்தி (29) என்பதும், திருட்டு போன பைக்கை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

  மேலும் விசாரணையில் அவர்கள் ஆற்காடு, திமிரி, வாலாஜா, ராணிப்பேட்டை, சிப்காட், வேலூர் உள்ளிட்ட இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.  இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai