சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்த கணவர், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

    அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாளின் மகன் சுரேஷ் (22), தொழிலாளி. இவரது மனைவி கமலா (19). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கமலா வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    வெளியூர் சென்றிருந்த சுரேஷ், மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு அங்கு இறந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai