சுடச்சுட

  

  மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கல்விதான் சிறந்த ஆயுதம் என்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினார்.

  காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கே.சந்துரு பேசியது:

  வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கும் கல்வி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கல்விதான் சிறந்த ஆயுதமாக திகழ வேண்டும் என்றார் அவர்.

  இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பரிசுகள் பெற ஊக்குவித்து பயிற்றுவித்த ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி கெüரவிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா முன்னிலை வகித்தார். பள்ளித் தலைவர் ஹரிகோபாலன் வரவேற்றார். முதல்வர் ராஜி ஹரிகோபாலன் நன்றி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai