சுடச்சுட

  

  சிறந்த ஆராய்ச்சிக்காக விஐடி ஆராய்ச்சி மாணவி பி.மகாலட்சுமிக்கு 2012-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருது வழங்கப்பட்டது.

  ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்விருதை மத்திய வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் சரத்பவார் புது தில்லியில் அண்மையில் நடந்த விழாவில் வழங்கினார் .

  சென்னையில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரேக்ஜிஸ் வாட்டர் அக்வாகல்சர் மைய விஞ்ஞானியான மகாலட்சுமி, வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேச அளவில் நடைபெற்ற மாநாடுகளில் வெளியிட்டுள்ளார்.

  அவர் விஐடி பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பி முதுநிலை பேராசிரியர் கே.கணேசன் வழிகாட்டுதலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரது மீன் வளர்ப்புப் பண்ணை அபிவிருத்திக்கான இடம் மற்றும் வகைப்பாடு அடையாளம் காணுதல் குறித்து முடிவு எடுத்தல் ஆராய்ச்சி கட்டுரைக்காக பி.எச்டி. பட்டம் அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் இந்த ஆராய்ச்சி கட்டுரை, மத்திய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையால் தேர்வு செய்யப்பட்டு ஜவஹர்லால் நேரு விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai