சாலை விபத்தில் கேபிள் ஆபரேட்டர் சாவு
By வேலூர் | Published on : 28th July 2013 03:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காட்பாடி அருகே பஸ்ûஸ முந்த முயன்றபோது லாரியும் பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் கேபிள் ஆபரேட்டர் உயிரிழந்தார்.
கார்ணாம்பட்டை அடுத்த செம்பராயநல்லூரைச் சேர்ந்தவர் கேபிள் ஆபரேட்டர் பார்த்திபன் (49). ஆரிமுத்துமோட்டூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் செம்பராயநல்லூர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்பாடியில் இருந்து கார்ணாம்பட்டுக்கு சனிக்கிழமை சென்றனர்.
கார்ணாம்பட்டு குளம் அருகே இவர்கள் சென்றபோது முன்னே சென்ற பஸ்ûஸ முந்த முயன்றனராம். அப்போது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பார்த்திபன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், இப்பகுதியில் சாலை வளைவாக இருப்பதால் பார்வை குறைபாடு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அவ்வழியாகச் சென்ற காட்பாடி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பொதுமக்களை சந்தித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.