Enable Javscript for better performance
டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு திருட முயற்சி நடந்துள்ளது.

    வாணியம்பாடி பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இரவு கடையின் விற்பனையாளராக பணிப்புரிந்து வரும் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ்  கடையை வியாழக்கிழமை பூட்டி விட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் பக்கவாட்டு சுவரில் ஆள் நுழையும் அளவுக்கு துளை போட்டு இருந்தது. கடையில் எந்த பொருளும் திருடு போகவில்லை. இதனை கண்ட கடையின் விற்பனையாளர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிவலிங்கம், தனிப்படை துணை ஆய்வாளர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai