Enable Javscript for better performance
துரித உணவு கலாசாரத்தை கைவிட வேண்டும் - Dinamani

சுடச்சுட

    

    இன்றைக்கு ஏற்படும் புதிய நோய்களுக்கு அடிப்படையாக உள்ள ஜங்க் ஃபுட், துரித உணவு கலாசாரத்தை இளைய தலைமுறை கைவிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

    வேலூரில் மாவட்ட அளவிலான தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியது:

    ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மருத்துவத் துறையில் தொடர்ந்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் முனைப்பு காட்டுகிறார்.

    திருத்தியமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான வசதியை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் 217 மருத்துவமனைகளின் வாயிலாக ரூ.686 கோடி செலவில் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 அரசு மருத்துவமனைகள் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையின் வாயிலாக ரூ.245 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    நோயற்ற சமுதாயத்தை உருவாக்க அரசு முயற்சிக்கும் அதே வேளையில், பொதுமக்களும் நோய்த் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் போதுமான விழிப்புணர்வு பெற்றாக வேண்டும். அதற்காகவே இத்தகைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

    இன்றைக்கு ஏற்படும் புதிய நோய்களுக்கு அடிப்படை காரணம் ஜங்க் ஃபுட், துரித உணவு கலாசாரமே. இதை கைவிட்டாலேயே இளைய தலைமுறை நோய்களில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார் அமைச்சர்.

    முன்னதாக ஆட்சியர் பொ.சங்கர் பேசியது: வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டத்தில் 19 ஆயிரத்து 152 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.48 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    உடல் உழைப்பு குறைவதால்தான் இன்றைக்கு பல நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். உணவு முறைகளில் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, நல்ல பழக்க, வழக்கங்கள் நம்மை நோய் அண்டாமல் பாதுகாக்கும் என்றார் ஆட்சியர்.

    எம்எல்ஏக்கள் டாக்டர் வி.எஸ்.விஜய்,  ம.கலையரசு, அ.முகமது ஜான், மேயர் பி.கார்த்தியாயினி உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai