Enable Javscript for better performance
பாஜக பிரமுகரைபடம் பிடித்தவர்  தப்பி ஓட்டம் - Dinamani

சுடச்சுட

    

    பாஜக பிரமுகரைபடம் பிடித்தவர்  தப்பி ஓட்டம்

    By வாணியம்பாடி  |   Published on : 28th July 2013 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடியில் பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகரை செல்போனில் படம் பிடித்தவர் போலீஸார் வருவதற்குள் மாயமானார்.

    வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டையைச் சேர்ந்தவர் கா.சிவபிரகாசம். இவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், மூத்தவர் அணிப் பிரிவிலும் உள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் செல்போனில் சிவபிரகாசத்தை போட்டோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட சிவபிரகாசம் உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மாணிக்கம், காவல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து மாயமானதால் போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai