சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் பாலாற்றுப் படுகையைக் காப்பாற்ற சிறப்பு கண்காணிப்பு பறக்கும் படைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  சங்கத்தின் மாவட்ட கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கே.லோகநாதன் வரவேற்றார். நிர்வாகிகள் கே.எம்.ராமகவுண்டர், என்.ரகுபதி, பி.எஸ்.உதய்குமார், என்.ஹரிமூர்த்தி, ராமதாஸ், வேலாயுதம், ரவீந்திரன், என்.ஆர்.எத்திராஜ் நாயுடு, வைத்தியநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  பின்னர் சிவசாமி நிருபர்களிடம் கூறியது: கடந்த பல ஆண்டுகளாக மழையின்றி வேலூர் மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தென்னைக்கு மட்டும் ஒரு சிலருக்கு மிகக் குறைந்த வறட்சி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு பேரிடர் நிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும், மாநில அரசு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

  மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் வெளியேற்றப்படும் தோல், வஜ்ஜிரக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இதனால் குடிநீர், விவசாய தேவைக்கான நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடராமல் இருக்க மாவட்டத்தில் பாலாற்றுப் படுகையை கண்காணிக்கும் வகையில் சிறப்பு பறக்கும் படைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட வஜ்ஜிர தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.

  கடுமையான வறட்சி நிலவுவதால் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய வங்கிக் கடனுக்காக டிராக்டர்களை பறிமுதல் செய்வதைக் கைவிட வேண்டும்.

  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் அரசியல் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் சரியான முறையில் கடன் கிடைக்காது. எனவே கூட்டுறவு சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். விவசாய அங்கத்தினரை கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும்.

  கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், தென்னை கொப்பரை கிலோவுக்கு ரூ.100 வழங்க வேண்டும்.

  சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சிவசாமி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai