சுடச்சுட

    

    மரக்கிளை விழுந்து ஒருவர் சாவு; 7 பேர் படுகாயம்

    By அறந்தாங்கி,   |   Published on : 28th July 2013 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறந்தாங்கி அருகே சனிக்கிழமை டீ கடை மீது மரக்கிளை விழுந்ததில் ஒருவர் இறந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழுவங்காடு பிரதான சாலையில் உள்ள அரச மரத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மனைவி அஞ்சம்மாள் (55), அவரது மகள் பூங்கொடி(30) ஆகியோர் சிறிய ஓலைக் குடிசையில் டீ கடை நடத்தி வந்தனர்.

    சனிக்கிழமை காலையில் மரக்கிளை ஒன்று திடீரென முறிந்து டீ கடை மீது விழுந்தது. இதில் அஞ்சம்மாள், பூங்கொடி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம்(60), நாராயணன்(58), ராஜமாணிக்கம்(60), செல்வம்(46), முருகன்(60), ராமன்(45) உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.

    அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக சிங்காரம், நாராயணன், அஞ்சம்மாள், பூங்கொடி ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வழியிலேயே சிங்காரம் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு 2 மனைவியும் 7 குழந்தைகளும் உள்ளனர். முன்னதாக தகவல் அறிந்த அறந்தாங்கி வட்டாட்சியர் கோ. தவச்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, தீயணைப்புத் துறையினருடன் சென்று மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai