சுடச்சுட

  

  பேர்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்ற மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், செல்வா இருவரும் வழிமறித்து கேலி, கிண்டல் செய்தார்களாம்.

  தகவல் அறிந்து அங்கு வந்த மாணவியின் உறவினர்கள், இரு இளைஞர்களையும் தட்டிக் கேட்டார்களாம். அப்போது பார்த்திபன், செல்வா இருவருக்கும் ஆதரவாக சிலர் வந்து, மாணவியின் உறவினர்களிடம் தகராறு செய்தார்களாம்.

  இது தொடர்பான புகாரின்பேரில் பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, மைக்கேல் (35), அமுல் (37), பாலின்குமார் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

  தலைமறைவாக உள்ள பார்த்திபன், செல்வா இருவரையும் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai