சுடச்சுட

  

  மாற்று ரயிலில் ஏற்றிவிடக் கோரி ரயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை

  By வாலாஜா,  |   Published on : 28th July 2013 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரயில் பழுதாகி நின்றதால் மாற்று ரயிலில் ஏற்றிவிடக் கோரி பயணிகள் வாலாஜாபேட்டையை அடுத்த தலங்கை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிலைய மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் புறப்பட்ட பயணிகள் ரயில் தலங்கை ரயில் நிலையத்துக்கு மாலை 5.50 மணியளவில் வந்தடைந்தது. அந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த இரு என்ஜின்களில் ஒன்றில் புகை வந்ததை அடுத்து ரயில் நிலைய மேலாளர் ஆர்.கே.திவாரியிடம் ரயில் என்ஜின் டிரைவர் புகார் தெரிவித்தார்.

  இதையடுத்து ரயில் நிலையத்திலேயே சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் ரயில் நிலைய மேலாளரை முற்றுகையிட்டு, பின்னால் வந்த பிருந்தாவன் விரைவு ரயிலை நிறுத்தி தங்களை ஏற்றி அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேலாளர் உயர் அதிகாரிகளிடம் தகவல் அளித்துதான் நிறுத்தமுடியும் என கூறியதால் அவரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதற்குள் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தலங்கை ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அதைத் தொடர்ந்து வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு அந்த ரயிலில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இரவு 8 மணியளவில் அரக்கோணம் பயணிகள் ரயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு புறப்பட்டுச் சென்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai