சுடச்சுட

    

    ரூ. 30 கோடியில் அரக்கோணம் இரட்டைக் கண் வாராவதி அகலப்படுத்த திட்டம்

    By அரக்கோணம்,  |   Published on : 28th July 2013 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகரில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ள இரட்டைக்கண் வாராவதியை ரூ.30.25 கோடி செலவில் அகலப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அரக்கோணம் நகரின் நடுவில் ரயில்வே இருப்புப் பாதை கட்ட இரட்டைக்கண் வாராவதி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

    தற்போது இந்தப் பாதையில் பேருந்துகள் செல்லாதவாறு உயரம் குறைக்கப்பட்டு சிறிய ரக வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. இருந்தும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இப்பாலத்தை மேலும் அகலப்படுத்தக் கோரி தமிழக முதல்வருக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மேற்படி சுரங்கப் பாதையை சீரமைக்க சுமார் ரூ.30.25 கோடி செலவாகும் என்பது குறித்த அறிக்கை தமிழக அரசின் திட்டங்கள் துறை தலைமை பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எம்எல்ஏ சு.ரவி தெரிவிக்கையில் வரும் நிதியாண்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai