சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே 9 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    குடியாத்தம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை லாரியில் கடத்துவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸார் குடியாத்தம்-பலமனேர் சாலையில் சோதனை மேற்கொண்டபோது, 9 டன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற லாரி சிக்கியது.

    லாரியை ஓட்டிச் சென்ற குடியாத்தத்தை அடுத்த லண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அரியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai