Enable Javscript for better performance
வழி தவறி வந்த மான்  நாய்கள் கடித்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே வழி தவறி வந்த மானை நாய்கள் கடித்து குதறின. அதனால் அந்த மான் இறந்தது.

    மேல்வடுகன்குட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் சனிக்கிழமை காலை நாய்கள் துரத்திக் கடித்ததால் ரத்த காயத்துடன் காணப்பட்ட மான் ஒன்று நின்றது. அந்த மானை அப்பகுதியினர் கட்டிப்போட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    வனத்துறையினர் வந்து மானை பனமடங்கி காட்டில் விடுவதற்கு முயற்சி எடுத்தனர். ஆனால் பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்ட அந்த மான் இறந்துபோனது. அதையடுத்து பிரேத பரிசோதனைக்கு மான் எடுத்துச் செல்லப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai