Enable Javscript for better performance
வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ரூ.26 லட்சம் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ரூ.26 லட்சம் கடனுதவி

    By குடியாத்தம்  |   Published on : 28th July 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    குடியாத்தம் வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள், மகளிர் குழுக்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 26 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

    12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடிக் கடனாக ரூ. 13 லட்சமும், 21 விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 13.50 லட்சமும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வங்கித் தலைவர் எஸ்.கோதண்டன் கடனுதவிகளை வழங்கினார். வங்கியில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ. 68 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தலைவர் தெரிவித்தார்.

    செயலர் வி. ரவி வரவேற்றார். துணைத் தலைவர் என்.பலராமன், வங்கி இயக்குநர்கள் கே.தட்சிணாமூர்த்தி, எம்.காசி, எம்.முருகன், எம்.கே.பூபாலன், செல்வி பாஸ்கர், கோமதி மனோகரன், கே. உஷா, சி.தேவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai