சுடச்சுட

  

  குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி, நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 974 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

  நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார்.

  சமூகநலத்துறை அமைச்சர் பா. வளர்மதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகியோர் சைக்கிள்களை வழங்கி பேசினர்.

  எம்எல்ஏ கு.லிங்கமுத்து, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ், நகர அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் எம்.பாஸ்கர், கே.எம்.பூபதி, கே. ஜவரிலால் ஜெயின், அமீன் சாஹிப், தலைமையாசிரியர்கள் டி.எஸ்.விநாயகம், கே.கிருஷ்ணன், சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, வி.என். கார்த்திகேயன், வி.ஜி.பழனி, பூங்கோதை முனியப்பன், ஆர்.கே.அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai