Enable Javscript for better performance
ஓவியப் போட்டியில் 400 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர்.

    ராணிப்பேட்டை அகில் தீக்க்ஷô பவுண்டேஷனின்கீழ் இயங்கிவரும் நவரத்னா கலை மன்றத்தின் சார்பில் 4 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டிகள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.

    இதில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் 400 பேர்கள் வரை கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    அகில் தீக்க்ஷô நிர்வாக இயக்குநர் சி.கிருஷ்ணன், நிர்வாகிகள் டி.கே.முகர்ஜி, பி.ஆத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ம.மோகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai