சுடச்சுட

    

    தலைமை ஆசிரியர்கள் பொதுநலச் சங்க நிர்வாகிகள் தேர்வு

    By வேலூர்  |   Published on : 29th July 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பொதுநலச் சங்கத்தின் வேலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

    வேலூரில் இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

    மாநிலப் பொதுச்செயலர் எஸ்.செல்வமணி, துணைத் தலைவர் கே.குணசேகரன், இணைச் செயலர் எம்.ஞானசேகரன், அமைப்பு செயலர் எம்.எஸ்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாவட்டத் தலைவராக பா.மதி, மாவட்டச் செயலராக த.ராமநாதன், மாவட்டப் பொருளாளராக ஜி.விஜயன், துணைத் தலைவராக கே.சாம்பசிவம் ஆகியோர் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வித் துறை பணிகளைக் கவனிக்க ஒரு நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அப்பொறுப்புக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai