சுடச்சுட

    

    சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இலவச தோல்

    சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இந்திய மருத்துவச் சங்கம், ரோட்டரி சங்கம், கரிகிரி மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.

    முகாமுக்கு மருத்துவ அலுவலர் பாரதி தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத்தின் மருத்துவச் சமூகச் சேவை இயக்குநர் கோபால் வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீராமலு தொடங்கிவைத்தார். கரிகிரி மருத்துவமனையின் மருத்துவர்கள் நிதிமி மாமி, ரீஜா அப்ராகம், ஸ்ருதிபாபு உள்ளிட்டோர் 350-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து, மருத்துகளை வழங்கினர்.

    மருத்துவர் வெங்கடேசன், ரோட்டரி சங்க சமூக இயக்குநர் ராஜா, சங்க செயலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai